Design a site like this with WordPress.com
தொடங்கவும்

தொடக்கம்

நமது கண்ணாடி பிம்பமே இந்த சமுதாயம். நமக்கு இந்த சமுதாயத்தில் நடக்கும் அனைத்து நல்ல மற்றும் தீய செயல்களுக்கும் நாம் நேரடியாகவோ , மறை முகமாவோ ஒரு காரணியாகிறோம் .நல் விதைகளை விதைப்போம் …

சமூகம் என்பது , 100000+ பேருக்கு தீமையை ஏற்படுத்தும் செயல் 10 பேருக்கு நன்மையாய் தோன்ற ,அதற்க்காக 5000+ பேர் போராட , 100+பேர் அரசியலாக்கி குழப்ப ,1000+ பேர் சமூக தளத்தில் அரட்டை அடிக்க ,1000+ பேர் ஒதுக்கப்பட/ஓடுக்கப்பட ,கோடி பேர் வேடிக்கை பார்க்க,5+ நாட்களில் மறந்து விடுவது. சுயநலத்தின் பெயரால், தவறுகள் திருத்தி கொள்ளப்படாமல் திணிக்க படுகின்றன, அடுத்த தலைமுறையிடம் .

சமூகம் எனும் குப்பை தொட்டியில் மக்கும் மற்றும் மக்காத குப்பையாய் நாம், சமுகத்தில் பல பிரச்சினைகளும், கேள்விகளும் அதிகமாய் பல நூறுகளில் (100+) உள்ளது, அத்தகைய அனைத்து பிரச்சினைகளுக்கும் பதிலாய், தீர்வாய் சாதி/மத/பொருளாதார/மொழி அடிப்படையில் பல ஆயிர(1000+) தீர்வுகள்/ யோசனைகள் அரசியல் சந்தர்ப்பவாதிகளால் பேசப்பட்டு மக்களை குழப்பி பிரிவினைகளை ஏற்படுத்தி பல பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படாமல் உள்ளது.

ஒவ்வொரு பிரச்சினைக்கும்
ஒரு தீர்வுதான் இருக்க முடியும், அந்த தீர்வை நான்தான் சொல்ல வேண்டும் என்ற மனப்பான்மை (மனநோய்) முதலில் மாறவேண்டும் …

நமது விருப்பத்திற்கு அப்பாற்ப்பட்டு , நமது செயல்கள் விதைகள் ஆகின்றன அது எங்கேயோ இன்னொருவரின் முலம் விருச்சமாக வளர்கிறது .இது தலைமுறையாக தொடரும் சமுதாயத்தின் வாழ்க்கை பயணம் …

search previous next tag category expand menu location phone mail time cart zoom edit close